தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் முக்கியமானவராக உள்ளார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஆர்யன்.
ஆர்யன் டீசர்:
கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். ஒரு பெயரை கூறிவிட்டு அந்த பெயர் உள்ள நபரை கொலையாளி சரியாக 1 மணி நேரத்தில் கொலை செய்வதும், அந்த கொலையாளியை எப்படி நாயகன் கண்டுபிடிக்கிறார்? என்பதே படத்தின் கதைக்களம் ஆகும்.
ராட்சசன் போல வருமா?
டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும் ராட்சசனைப் போல மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால், ராட்சசன் படம் விஷ்ணு விஷால் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் படம் விறுவிறுப்பான திரைக்கதையாலும், கிறிஸ்டோபர் என்ற வில்லன் கதாபாத்திரத்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படமும் அதேபோல இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
யார் யார்?
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ப்ரவீன் இயக்கியுள்ளார்.
கடைசியா அவர் நடிப்பில் லால் சலாம் படம் வெளியானது. ஓஹோ எந்தன் பேபி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். தற்போது இரண்டு வானம், மோகன்தாஸ் படங்களும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கட்டா குஸ்தி பாகம் 2ம் அவரது நடிப்பில் உருவாக உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.