விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய  படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன.


ஏப்ரம் மாதம் ரிலீஸ்


ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழில் ஜி.வி பிரகாஷ் மற்றும் விஷால் நடித்துள்ள படங்கள் மட்டுமே இந்த மாதம் வெளியாகும் பெரிய படங்களாக உள்ளன. இந்தப் படங்களைப் பற்றிய தகவல்கள் இதோ.


ரத்னம்


ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம், கிருஷ்ணா, பிரியா பவானி ஷங்கர், சமுத்திரகனி, கெளதம்மேனன் , யோகிபாபு  இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சு பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி இப்படம் திரையில் வெளியாகும் 






கள்வன்






ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிப்பில் பி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் கள்வன். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து நாயகனாகவும் நடித்துள்ளார். லவ் டுடே புகழ் இவானா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா , விஜய் டிவி தீனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.


டியர்


ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் டியர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், மற்றும் நந்தினி உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.


இந்தப் படங்கள் தவிர்த்து விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகிபாபு , வி.டி.வி கணேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப் பட இருக்கிறது.