மதகஜராஜா


சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படம் மதகஜராஜா. இப்படத்தின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியில் இருந்ததால் படம் 12 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. தற்போது இந்த பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது மதகஜராஜா. சுந்தர் சி , விஷால் , சந்தானம் , விஜய் ஆண்டனி என ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக இந்த காம்போவை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் மதகஜராஜா திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது.


மதகஜராஜா பட வசூல்


மதகஜராஜாவின் மொத்த பட்ஜெட் 15 கோடியாகும். இப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையில இதுவரை 25 கோடி வரை வசூலித்துள்ளது. பொங்கல் விடுமுறை முடியும் போது படம் 50 கோடி வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 






கெளதம் மேனன் இயக்கத்தில் விஷால் 


மதகஜராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் வைரல் காயாச்சலுடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் விஷால் பேசியபோது அவரது கை நடுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. விஷாலுக்கு நரம்பு தளர்ச்சி , அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என பலவிதமான தகவல்கள் இணையத்தில் பரவின. " தனக்கு நரம்பு தளர்ச்சி இல்லை என்றும் அன்றைய தினம் தனது உடல் நிலை சரியில்லாததால் தன் கைகள் நடுங்கியதாக விஷால் தெரிவித்தார். 


மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய நடிகர் விஷால் தனது அடுத்தடுத்த பட லை அப்கள் பற்றி தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக தான் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் , இதன்பின் துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் இயக்கி நடிக்க இருக்கிறார். இதன் பின் டிமாண்டி காலனி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்