ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நடிகர் விஷால் இந்த தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
பாராட்டுகளை குவித்த விஷால் :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவளிப்பது அவர்களுடன் நேரம் கழிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நடிகர் விஷால் தனது பிறந்தநாள் அன்று முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவரின் அந்த செயலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சோசியல் மீடியாவில் குவிந்தன.
விஷால் குழந்தைகள் தின போஸ்ட் :
நடிகர் விஷால் பிறந்தநாள் அன்று குழந்தைகளுக்கு உணவு அளித்த போது மற்றும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குழந்தைகள் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். குழந்தைகள் நமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் தேவை மற்றும் ஆசையை பூர்த்தி செய்வது நம்முடைய கடமை மற்றும் பொறுப்பு எனும் ஒரு அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.
லத்தி டிசம்பர் 22 ரிலீஸ் :
நடிகர் விஷால் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற தவறியது. அதை தொடர்ந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'லத்தி'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.