வைரஸ், 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மெடிக்கல் த்ரில்லர் படமாகும். இது கேரளாவில் 2018 நிபா வைரஸ் பரவியதன் பின்னணியில் எடுத்த படம்.
ஆஷிக் அபு இந்தப் படத்தை இயக்கினார் . இப்படத்தை முஹ்சின் பராரி, ஷார்பு மற்றும் சுஹாஸ் எழுதியுள்ளனர். கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் படம் முழுவதும் படமாக்கப்பட்டு 2019 ஜனவரி தொடங்கி, பிப்ரவரி படப்பிடிப்பு முடிந்தது. விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற இப்படம், 2019 ஜூன் 7 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி இது ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.
படத்தின் நாயகன் நாயகிகள் :
குஞ்சாக்கோ போபன் -டாக்டர். சுரேஷ் ராஜன், தலைமை மருத்துவர்
பார்வதி திருவோத்து -டாக்டர். அன்னு
சி கே பிரமீலாவாக- ரேவதி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் -சைலாஜா
டோவினோ தாமஸ் -பால் வி ஆபிரகாம் ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியர்
இந்திரஜித் சுகுமாரன்- டாக்டர். பாபுராஜ்
விஷ்ணு பாஸ்கரனாக- ஆசிப் அலி
பூர்ணிமா இந்திரஜித் -டாக்டர். ஸ்மிருதி பாஸ்கர், சுகாதார சேவைகள் இயக்குநர்
ரஹ்மான்- டாக்டர். சலீம்
நர்ஸ் அகிலாவாக- ரிமா காலிங்கல்
அகிலாவின் கணவர் சந்தீப்பாக- ஷரப் யு தீன்
முதல் நோயாளி ஜகாரியாவாக- ஜகாரியா முகமது
ஜகாரியாவின் தந்தை- ரசாகாக இந்திரன்ஸ்
கதையின் சுருக்கம் :
தொலைபேசி ஒலிக்க ஆரம்பிக்கும் ரிசிவரை எடுக்கும் அவர் ,மறுமுனையில் பேசும் பெண் மருத்துவர், "சார் மெடிக்கல் காலேஜ்ல வெண்டிலேட்டர்ஸ் , ஆக்சிஜென் எல்லாம் தீர்ந்து போச்சு. எதுவும் காலியா இல்ல. இனிமே பேஷன்ட்ஸ் வந்தா என்ன பண்றது?" என்று கேட்கிறார். இவ்வாறாக வைரஸ் படம் தொடங்குகிறது.
ஜகாரியா முகமது என்ற நபர் நோய்த்தொற்று காரணமாக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வரப்படுகிறார், அங்கு அவர் அறியப்படாத வைரஸின் அறிகுறிகள் இருக்க சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்துவிடுகிறார். ஜகாரியாவின் சி.டி ஸ்கேன் எடுத்துக்கொண்டிருந்த நர்ஸ் கீதாவுக்கு வைரஸ் தோற்று ஏற்பட்டு விடும் . செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தத்தை பரிசோதித்தபோது, அளவு மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும். இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கவலையும் குழப்பமும் அடைந்தனர். ஜகாரியாவுக்கு சிகிச்சையளித்த நர்ஸ் அகிலாவும் பாதிக்கப்படுகிறார் .
ஒரு பக்கம் மருத்துவத்துறையினர் நோயைக் குணப்படுத்த போராடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒரு விசாரணை அதிகாரி இந்த நோய் எங்கிருந்து யார் வழியாக பரவுகிறது இன்னும் யாருக்கெல்லாம் இந்த நோய் இருக்கும் என்று கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபடுவார்கள் . இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி யார் ? அவர் யாரெல்லாம் தொடர்பு கொண்டார் . அவர்கள் யாரெல்லாம் சென்று சந்தித்தார்கள் என்று முழு அட்டவனை எடுத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை நபர்கள் அனைவரும் தங்களது பங்கை அளிப்பார்கள் . தும்மும் போது ஒருவர் எதேட்சையாக முகத்தை மூடிக்கொள்வார். எதிரில் இருப்பவர் நோய்தொற்றின்றி தப்புவார். இது போன்ற காட்சிகள் படத்தில் தற்பொழுது நடக்கும் சூழலுக்கு மிகவும் ஒத்துப்போக கூடிய கட்சிகளாகவே இருக்கும்.
இறுதியாக மக்கள் அனைவரும் எவ்வாறு இந்த நோயில் இருந்து வெளிவருகிறார்கள், இதன் ஆரம்பம் இங்கேயே என்பதை மருத்துவ திரில்லராக சொன்னபடம் தான் வைரஸ். உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாபாத்திரங்களும் அதற்கு ஏற்றார் போல் தேர்வு செய்யப்பட்டு இருக்கும்.
படுக்கை இல்லாமல் , வெண்டிலேட்டர் இல்லாமல் , மருத்துவர்கள் பற்றாக்குறையால் மொத்த ஊரும் பயத்தில் இருக்கும் . 2018ம் ஆண்டு கேரளாவில் 17 பேரின் உயிரைப் பறித்த நிபா வைரஸ் பற்றிய தத்ரூபமான திரைப்படம் . தருபொழுது நம் நாட்டில் இருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகளும் நிபா வைரஸின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். எப்படி ஒரு வைரஸ் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவி காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரை பறிக்கிறது என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் படம் வைரஸ்.
கடந்த ஆண்டு கிராமப்புற மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு போதாத நிலையில் மக்களிடம் நாடகம் அல்லது படம் மூலம் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்த போது, இந்தப் படத்தை சிபாரிசு செய்தது சுகாதாரத்துறை . மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திய படமும் இது தான்.