Viruman movie trailer: 'பயமுறுத்தி எவனும் நெருங்க முடியாது” : வெளியானது விருமன் ட்ரெயிலர்..

Viruman movie trailer: நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

Viruman  movie trailer: நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டைமெண்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர்  வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

முத்தையா இயக்கி, நடிகர் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதி ராஜா, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, விருமன் படத்தின் நடிகர் கார்த்தி நடிகை அதிதி, நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். 

படத்தின் முதல் சிங்கிள் டிராக் ’கஞ்சாபூவு கண்ணால’ பாடல்  ஏற்கனவே யூடூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்து வருகிறது.

 

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.

முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola