நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் சார்பில், நடிகர் கார்த்தி-அதிதி நடித்த விருமன் திரைப்படம். முத்தையா இயக்கியத் இத்திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி உலகமுழுதும் வெளியானது. தமிழ்நாட்டில் எதிர்பார்த்தை விட அதிக வசூல் செய்து மெகா ஹிட் அடித்தது விருமன். 


குறிப்பாக, தென்மாவட்டங்களில் இன்றும் நல்ல வசூலில் ஓடிக் கொண்டிருக்கிறது விருமன். விருமன் படத்தின் அடுத்தடுத்த வீடியோ பாடல்கள் வெளியாகி, அவையும் அதிக அளவில் வியூவ்ஸ் பெற்று வருகின்றன. விருமன் வெளியீட்டிற்கு பின் வெளியான திருச்சிற்றம்பலத்தை விட விருமனுக்கு நிறைய தியேட்டர்களும், பார்வையாளர்களும் இருப்பதால், இன்னும் ஓரிரு வாரத்திற்கு பிறகே விருமன் ஓடிடி ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 






விருமன் ஓடிடி உரிமத்தை பெறுதற்கு பிரபல ஓடிடி நிறுவனம் பெரிய விலை பேசி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சற்று நேரத்திற்கு முன் யூடியூப் தளம் ஒன்றில் விருமன் வெளியாகியுள்ளது. வழக்கமாக படம் வெளியானதும் தியேட்டரில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பைரசி வீடியோக்கள் தான் இது போன்ற தளங்களில் வரும்.


ஆனால் இந்த முறை, விருமன் HD ப்ரிண்ட், யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. சப்டைட்டிலுடன் கூடிய இந்த ப்ரிண்ட், வெளிநாட்டில் இணைதள ஓடிடி ஒன்றில் வெளியான ப்ரிண்ட் என்று கூறப்படுகிறது. ஆனால், அது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் ஓடிடி தளங்கள் எதிலும் வராத நிலையில், தரமான குவாலிட்டியில் விருமன் படத்தை யூடியூப்டில் சிலர் வெளியிட்டனர். 


தகவல் அறிந்து, அந்த தளங்களில் உள்ள விருமன் படத்தை தயாரிப்பு நிறுவனமான 2டி நீக்கி வந்தாலும், அடுத்தடுத்து வெவ்வேறு பயனர்களின் யூடியூப் பக்கத்தில் விருமன் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால், விருமன் ஓடிடி விற்பனை கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. 






தியேட்டர் ப்ரிண்ட் வந்தாலும், படம் நன்றாக இருந்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் என்கிற ஃபார்முலா படி, விருமன் மாதிரியான நல்ல படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் மோசமான படங்களாக இருக்கும் பட்சத்தில் 15 நாட்கள் காத்திருந்து ஓடிடியில் பார்க்கும் பழக்கம் தற்போது மாறி வருகிறது. இந்த நேரத்தில் HD தரத்தில் விருமன் படத்தை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.