சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களே பழியை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பெரும்பாலான அநீதிகளுக்கு அவளே குற்றவாளியாக்கப்படுகிறாள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து தன்னைத்தானே காத்துக்கொள்வதற்கு  தற்காப்பு கலைகள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால். அதனை விளக்கும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


கராத்தே கேர்ள்:



பெண் ஒருவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து  ஆறு ஆண்கள் கொண்ட குழுவினர் வம்பு செய்கின்றனர். முதலில் தயங்கி தயங்கி பின்னோக்கி செல்லும் அந்த பெண் , திடீரென  அந்த ஆண்களை எதிர்த்து சண்டைப்போடுகிறார். சண்டை என்றால் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். அவர் சுழன்று சுழன்று அடிக்கும் காட்சிகளை பார்க்கும் பொழுது ஏதோ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே இருக்கின்றது. அந்த பெண் தாக்கியதும் அந்த ஆண்கள் அங்கிருந்து தப்பித்தோம். பிழைத்தோம் என ஓடுகின்றனர். இது பிளான் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவா என தெரியவில்லை! ஆனால் பார்ப்பதற்கு Feel Good ஆக இருக்கிறது.


 




தோனி வீட்டு செல்லப்பிராணிகள்:


இது ஒருபுறம் இருக்க  கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி வீட்டு செல்லப்பிராணிகளின் வீடியோக்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.  தோனி வீட்டில் நாய்கள், முயல்கள் , ஆடுகள், குதிரைகள் , கிளிகள் என ஏகப்பட்ட வெரைட்டியில் செல்லப்பிராணிகளை பார்க்க முடியும். சமீபத்தில் அவர்கள் வெள்ளை நிறத்தில் மேலை நாட்டு ஆடு ஒன்றை வாங்கியிருக்கின்றனர். 


வீடியோ: