கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் அஜித்தும் ஒருவர். வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்த அஜித் தற்போது பெரும் வியாபார கதாநாயகன். அவரைப் பொறுத்தவரை தன்னுடைய வேலை என்பது நடிப்பது மட்டுமே அதை செவ்வென செய்துவிட்டு ஒதுங்கிவிடுவதுதான் உத்தமம் என்று இருக்கிறார். அதனால் அவர் தன்னுடைய பட ப்ரொமோஷன்களுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ வருவதில்லை. 


அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது விருப்பமான பைக் ரைடில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.


அந்தவகையில் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற வேண்டுமென்ற தனது ஆசையை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் வாகா எல்லைக்கு சென்ற அஜித் அங்கு ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


அந்தப் புகைப்படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் தயாரிப்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அஜித்தை ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார்.






இந்நிலையில், பைக் ரைடுக்கு இடையில் தார் பாலைவனத்தில் அவர் பைக்கில் சாய்ந்தபடி ஓய்வு எடுக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.


முன்னதாக, 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். 


பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார். பின்னர் டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலை ரசித்ததுடன் அல்லாமல், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலானது.  அதுமட்டுமின்றி, பைக்கிலேயே 67 நாடுகளை சுற்றிய யாசர்லூவை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Actor Ajith photos | ஒரு கையில் ஹெல்மெட்.. மறு கையில் தேசியக்கொடி.. வாகா எல்லையில் தல அஜித்! ஃபோட்டோஸ் உள்ளே..