நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்று, ஐந்தே நாள்களில் 200 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது.


சக்சஸ் மீட்


கமல்ஹாசன் தவிர விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்த படம்,  ஜுன் 3ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.


இந்நிலையில், படத்தின் வெற்றி காரணமாக முன்னதாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் கமல்ஹாசனும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.




போதை மருந்து பற்றி பேசிய லோகேஷ் 


அப்போது ”உங்களுடைய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மூன்று படங்களிலும் ஏன் போதை மருந்து பற்றி பேசியிருக்கிறீர்கள்?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”இது சமூக அக்கறையின் சின்ன வெளிப்பாடு தான். இந்தப் படம் வெறுமனே பொழுதுபோக்கு படமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. இந்தப் படங்களில் இதை சொல்லும் நட்சத்திரங்களுக்கென்று ஒரு மதிப்பு உள்ளது.


வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் அல்ல


கமல்ஹாசன், விஜய் போன்ற நட்சத்திரங்கள் நேரடியாக வந்து போதை மருந்துகள் அற்ற ஒரு சமூகம் வேண்டும் என்று சொல்லும்போது, இங்கு சட்டவிரோதமாக விற்கப்படும் போதை மருந்துகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அச்செய்தி அமையும்.


படத்தில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே இல்லாமல், சமூக அக்கறையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் சொல்வதன் காரணமாக தான் இந்தச் செய்தி படத்தில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


கைதி, மாஸ்டர் படங்கள்




கைதி படத்தின் Spin off எனப்படும் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக விக்ரம் படம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களிலும் கடத்தல் போதைப் பொருளும் அதைக் கைப்பற்ற  முற்படும் கடத்தல் கும்பல் Vs காவல் துறையினர் எனவும் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.




இதேபோல் மாஸ்டர் படத்தில் போதைக்கு அடிமையான விஜய், அதனால் ஏற்படும் சிறு விபத்துச் சம்பவம் காரணமாக எப்படி போதைப் பழக்கத்தைக் கைவிட்டு மீண்டெழுகிறார் எனக் கூறப்பட்டிருக்கும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.