விக்ரம் :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் , ஃபஹத் பாசில் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் காம்பினேஷனில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. கமல் தனது சொந்த தயாரிப்பில் எடுத்த இந்த படம் தாறுமாறான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மாஸ் ஹிட் கொடுத்திருக்கும் தமிழ் படமாக அறியப்படுகிறது.


 






 


தற்போதைய சூழலில் இந்திய அளவில் கோலிவுட் வரலாற்றில் 2.0 (ரூ. 508 கோடிகள்) மற்றும் எந்திரன் (ரூ. 218 கோடிகள்) ஆகிய படங்களைத் தொடர்ந்து விக்ரம் இப்போது மூன்றாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கிறது.


 






விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் :


 


முதல் வாரம் - ரூ. 164 கோடி


2வது வெள்ளி - ரூ. 11 கோடி


2வது சனிக்கிழமை - ரூ. 17 கோடி


2வது ஞாயிறு - ரூ. 18 கோடி


மொத்தம் - ரூ. 210 கோடி


 


பாகுபலி 2 மற்றும் KGF அத்தியாயம் 2 ஆகிய இரண்டு படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களின் இரண்டாவது வார வசூலை விட விக்ரம் படம் பிடித்த வசூல் அதிகம் 






இந்தியாவில் விக்ரமின் பாக்ஸ் ஆபிஸ்  கலெக்ஷன் :


 


தமிழ்நாடு - ரூ. 127 கோடி


ஆந்திரா / தெலுங்கானா - ரூ. 25 கோடி


கர்நாடகா - ரூ. 18.75 கோடி


கேரளா - ரூ. 31 கோடி


இந்தியாவின் மற்ற பகுதிகள் - ரூ. 8.25 கோடி


 


மொத்தம் - ரூ. 210 கோடி