உலகநாயகன் கமல்ஹாசனின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது படங்கள் வெளிவரவில்லை. அவரது 'விக்ரம்' படத்திற்கான டிக்கெட்டுகளை வெறித்தனமாக வாங்கி ரசிகர்கள் அவருக்கு அற்புதமான பதிலைக் கொடுத்து வருகின்றனர். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த மல்டிஸ்டாரர் படத்தை லோகேஷ் கங்கராஜ் இயக்கியுள்ளார். இன்று காலை படம் வெளியாவதற்கு முன்பாகவே திரையரங்குகளில் ரசிகர்கள் சிறப்பான கொண்டாட்டத்தை மேற்கொண்டனர். திரைப்படத்தின் முதல் பாதி தொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தொடர்பாக ஏபிபிநாடுவின் பார்வையில் முதல் பாதி மற்றும் கதையின் ஒன் லைனர் என்ன?
விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தப் படத்தில் தங்களுக்கு என தனியாக ஒரு முத்திரை பதிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார்.
விக்ரம் படத்தின் ஒன் லைனர்:
விக்ரம் திரைப்படத்தின் கதை கரு என்னவென்றால் ஒரு டாப் ரெங்க் காவல்துறை அதிகாரிகளை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிடுகிறது. இந்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க ஃபகத் ஃபாசில் களமிறங்குகிறார். அதுவே இந்தப் படத்தின் கதை கருவாக உள்ளது.
முன்னதாக விக்ரம் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாக சிலர் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்