இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் அன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உருக்கியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 3-ந் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்ததையடுத்து படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




படம் வசூலில் பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கையில், நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜூக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ள தனிப்பட்ட கடிதம் என்பதால்.மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும். பொதுவெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள் ஆக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள் ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் தொடர வாழ்த்துக்கள்.


அயராது... விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம்
என்றும் நிறைந்திருக்கும்


     உங்கள் நான்


       கமல்ஹாசன்



கமலின் இந்த கடிதத்திற்கு,  ‘லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர். இதைப் படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது! நன்றி ஆண்டவரே எனப் பதிவிட்டுள்ளார். லெட்டரும், இந்தப் பதிவும் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண