பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள், அவர் நடிக்கவிருந்த கரிகாலன் பட போஸ்டரை ஷேர் செய்துள்ளனர்.


பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒன்றான, ஆதித்த கரிகாலன் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார் விக்ரம். அவரின் நடிப்பிற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வீரம், முன்கோபம் கொண்ட அந்த காலத்து ரக்கட் பாய்தான் விக்ரம் நடித்துள்ள ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரம்.






இதற்கு முன்பாகவே, கரிகாலன் என்ற பட டைட்டிலுடன் விக்ரம் கரிகாலனாக நடிக்கவிருந்தார். இப்படத்தில் சங்க காலத்தில் தமிழ் மன்னை ஆண்ட கரிகாலனின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருந்தனர். 


இந்த படத்திற்கு இரண்டு பாடல்களை இசையமைத்தும் முடித்தார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தை எல்.ஐ.கண்ணன் இயக்க தொடங்கினார். பின்பு, ஏ.ஆர் காந்தி கிருஷ்ணா, படத்தின் கதையை தாம்தான் எழுதி உள்ளதாக கூறி, மீதி கதையை அவர் படம்பிடிக்க ஆரம்பித்தார். 


இப்படத்தை சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த எஸ்.எஸ்.வாசன் மற்றும் எஸ்.பார்த்திபன்  தயாரித்தனர். 
அந்த காலத்தில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள பிரமாண்டமான கல்லணயை கட்டியவர் கரிகாலன், அந்த காட்சிகளை க்ராபிக்ஸ் செய்யவது கடினமாக இருந்ததாலும், பட்ஜெட் பிரச்சனைனாலும் இப்படம் அப்படியே கைவிடப்பட்டது. அதுபோக, அந்நேரத்தில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தில் பயங்கர பிசியாக இருந்தார். இதற்காக உடல் எடையை மாற்றியமைத்திருந்ததால் அப்படம் கைவிடப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


பொன்னியின் செல்வனுக்கு முன்பே, இதுதொடர்பான விவாதத்தில் முதலில் இருந்தே நடிகர் விக்ரமை கரிகாலன் வேடத்திற்கு தேர்வு செய்திருந்தனர். அதற்கு காரணம் ராவணன் படத்தில் அவர் கொடுத்த ரக்கட் பாய் நடிப்புதான். எப்படியோ, மணிரத்தினத்தின் ஆதித்தனாக வாழ்ந்துவிட்டார். 






இப்போது அவரின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அந்த பழைய போஸ்டரை ஷேர் செய்து, "Once upon a time there lived a Ghost" என்று 
கேப்ஷனோடு பதிவிட்டுள்ளனர்.