நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கே.ஜி.எஃப்  2 படத்தின் வசூலை முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3 ஆம் திரையங்குகளில் வெளியானது. வெளியான அன்றைய நாளிலிருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் இந்தியாவில் இதுவரை 192 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் இன்று 200 கோடியை தாண்டி விடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






படம் வெளியான முதல் வாரத்திலேயே 100 கோடியை தாண்டிய விக்ரம் திரைப்படம், 2 ஆவது வாரத்தில் தோராயமாக 47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் மூலம் விக்ரம் திரைப்படம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்தின் வசூலை முந்தியுள்ளதாக திரை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 


இது குறித்து திரை ஆர்வலரான ரமேஷ் பதிவிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில்,  “ விக்ரம் திரைப்படம்  கே.ஜி. எஃப் 2 படத்தின் வசூலை முந்தி தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. நாளைக்குள் அஜித்தின் வலிமை படத்தின் வசூலை முந்தி முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். 


 






 


 






 


மேலும் மனோபாலா விஜயபாலன் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ தமிழகத்தில் விக்ரம் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் படத்தை வசூலை முந்தி இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த 3 ஆவது படமாக மாறியிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 






இந்தியளவில் வசூல் விவரம்  


முதல்வாரம்  – Rs. 164 கோடி 
2 ஆவது வெள்ளிக்கிழமை  – Rs. 11 கோடி 
2 ஆவது சனிக்கிழமை  – Rs. 17 கோடி 


மொத்தம் - 192கோடி