லோகேஷ் கனகராஜ் இயக்கி தமிழில் வெளியான விக்ரம் படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்த பாத்திரம் நடிகர் ஜாஃபர் சாதிக் உடையது. கால் நரம்பை கட்டிங் ப்ளையரால் கட் செய்யும் டார்க் வில்லன் பாத்திரம். கனக்கச்சிதமாக செய்து முடித்திருந்தவரிடம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளச் சொல்லிக் கேட்டோம். அவர் பகிர்கையில்,”நடிகர் சூர்யாவுடன் நடிச்சது எங்கள் எல்லாருக்குமே சர்ப்ரைஸாக இருந்தது. எங்க டீம் ஒரு சீக்ரேட்டான டீம்.கடைசி வரைக்கும் ரோலக்ஸாக யார் நடிக்கிறாங்கனே சொல்லலை.செட்டுக்குப் போய்தான் ரோலாக்ஸாக் அவர் நடிப்பதே எங்களுக்குத் தெரியவந்தது. அவரது கெட்டப்பை பார்த்ததுமே மிரண்டுவிட்டேன்.ஷாட் எடுக்கும்போது ஒரு சிரிப்பு சிரிப்பாரு அதைப் பார்த்ததும் செட் முழுவதும் அமைதி. எல்லோரும் அவரை கண் இமைக்காம பார்த்துட்டு இருந்தோம். ரோலக்ஸ் கேரக்டரா இறங்கி செஞ்சிட்டு இருந்தாரு.இரண்டு நாள் ஷூட்டிங் இருந்தது. அவர் செட்டுக்கு வந்தார். கச்சிதமா நடிச்சார் கிளம்பிப் போனார். ஷாட் முடிச்சதும் அர்ஜூன் தாஸிடம் ’ஓகேவாயா?’ன்னு கேட்டாரு. எல்லோருமே சிரிச்சிட்டோம்.






”நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவருடன் நடிக்கும்போது ஒரு அண்ணன் ஃபீல்தான் இருந்தது. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். நடிக்க நிறைய ஸ்பேஸ் கொடுப்பாரு. தன்னுடன் நடிக்கறவங்களுக்கும் தனக்கும் ரிதம் செட்டாகுதான்னு பார்த்துப்பாரு. இந்தப் படத்துல நடிச்ச எல்லோருமே வார்மான நடிகர்களா இருந்தாங்க. யாருமே சூப்பர் ஸ்டார் என்கிற தோரணையை எங்கேயுமே காட்டிக்கலை. ஆனால் நடிப்பை பத்தி என்கிட்ட கேட்காதிங்க. நான் ஜாலியா செட்டுக்குப் போனேன்.ஃபன் செய்தேன் வந்துட்டேன்” என கலகலப்பாக உரையாடினார்.