தமிழ் ரசிகர்களால் உலக நாயகன், ஆண்டவர், பிக்பாஸ் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் வருகிற நவம்பர் 7-ஆம் தேதியன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில் அவர் நடித்துவரும் ‘விக்ரம்’ படக்குழுவினர் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்ரமுக்காக ரசிகர்கள் செம்ம விருப்பத்துடன் காத்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , கேக் வெட்டி விக்ரம் படக்குழுவினருடன் கொண்டாட்டத்தின் ஈடுபட்டுள்ளார் கமல். கேக்கிலும் கூட "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர இணை - எழுத்தாளர் ரத்தின குமார்,காயத்திரி ஷங்கர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோரும் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விக்ரம் படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கமலுக்கு வில்லனாக நடித்து வருகின்றனர். இவர்களை தவிர அர்ஜூன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் , ஷிவானி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. பாலிவுட் நடிகர்களும் கூட படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெகுவாக பாராட்டியிருந்தனர். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் வெலியிட்ட ஷூட்டிங் புகைப்படங்களும் வைரலானது . குறிப்பாக கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் 80-களில் நடித்த கமலை நினைவு கூறுவதாக அமைந்தது. படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.