நடிகர் விஜய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவரது வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.


விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்


நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன்  first look போஸ்டர் நேற்று (ஜூன்.22) மாலை வெளியானது.  தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.






வம்சி இயக்கும் இப்படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு ’பான் இந்தியா’ படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


விஜய் - பிரகாஷ்ராஜ் கூட்டணி


படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ’கில்லி’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இப்படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை படம் கிளப்பியுள்ளது.






முன்னதாக நேற்று மாலை first look போஸ்டரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்டாக்கி அதகளம் செய்து வந்தனர். படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், ”வாரிசு” என்ற டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் இரண்டு போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண