தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படம் இறுதிகட்டப் படப்பிடிப்பில் உள்ளது. பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , மோகன் , லைலா , பிரேம்ஜி , வைபவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மாஸ்கோ , தாய்லாந்து , இலங்கை , இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தந்தை மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் விஜய் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக டீஏஜீங் தொழில் நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியுள்ளது.


தி கோட் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் 110 கோடிக்கு பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது.


தி கோட் அப்டேட்


நாளை ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 50 ஆவது  பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாக இருக்கிறது. சின்ன சின்ன கண்கள் என்கிற இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே வெளியாகிய விசில் போடு பாடலை நடிகர் விஜய் பாடியிருந்த நிலையில் இது அவருடைய குரலில் வெளியாகும் இரண்டாம் பாடல்