அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களை ஆக்கிரமித்த விஜய் தேவரகொண்டா ஒரு பான் இந்திய நடிகராக வலம் வருகிறார். தனது வசீகரமான தோற்றத்தாலும் சிறப்பான எதார்த்தமான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை குவித்துள்ளார்; இந்த ஹீரோ தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


 




நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லைகர்'. ஏராளமான விளம்பரங்களுடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் சரியான வசூலை ஈட்டாமல் தோல்வியை சந்தித்தது; இந்த படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அப்படம் சறுக்கல்களை சந்தித்தாலும், நடிகை சமந்தாவுடன் 'குஷி' திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார். 


 






 


ஐந்து ஆண்டுகளாக #Deverasanta :



கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது சாண்டா கிளாஸ் மற்றும் அவரின் பரிசுகள்தான். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய ஒரு திட்டம் #Deverasanta. இதன் மூலம் அவரின் ரசிகர்களை ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவின் இந்த ஆண்டு பிளான் மிகவும் பெரியதாக திட்டமிடப்பட்டுள்ளது. 


 






 


ரசிகர்களின் வாக்கு சதவீகிதம் :


 
#Deverasanta2022 பிளான் படி அவரின் 100 ரசிகர்களுக்கு விடுமுறை கொண்டாட்டமாக சுற்றுலா தளத்திற்கு அனுப்ப போவதாக முடிவு  எடுத்துள்ளார். அதற்கான அனைத்து செலவுகளையும் விஜய் தேவரகொண்டா ஏற்று கொள்ள உள்ளார். எந்த இடம் என்பதை தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என்ற தனது கோரிக்கையை ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ளார்.


அதனோடு இந்திய கடற்கரை பகுதிகள், மலை பகுதிகள், பாலைவனம், கலாச்சாரம் என சில இடங்களை குறிப்பிட்டுள்ளார்; இதில் இடத்தை தேர்வு செய்வதையும் ரசிகர்களிடமே ஒப்படைத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.


31000 ரசிகர்கள் இதற்கு வாக்களித்துள்ளனர். அந்த வாக்குகளின் எண்ணிக்கையின் படி மலை பகுதிகளுக்கு 42.5%, கடற்கரை பகுதிகளுக்கு 24%, கலாச்சார இடங்களுக்கு 27.1% மற்றும் பாலைவன பகுதிகளுக்கு 6.3% வாக்குகளும் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்; இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத ரசிகர்கள் அவர்களின் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள்.