நடிகர் விஜயகாந்த் டூப் போடாமல் நடித்த படத்தின் காட்சி ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் உருவம், நிறம், உயரம் போன்ற பல குறைகளை கடந்து சாதனைப் படைத்தவர்கள் ஏராளம். அவர்களில் இன்றைக்கும் ரசிகர்களால் கேப்டன் என்றழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஒருவர். நிறத்தால் முதன்முதலில் தமிழ் சினிமாவில் நிராகரிக்கப்பட்ட அவர் பின்னாளில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல், அனைவருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதராகவும் திகழ்ந்தார். 

விஜயகாந்த் என்றால் பலருக்கும் நினைவு வருவது அவரது போலீஸ் படங்களும், கால்களை சுவற்றில் வைத்து எகிறி அடிக்கும் சண்டை காட்சிகளும் தான். அப்படி அவர் நடித்த சண்டைக் காட்சிகளில் சில கடினமான காட்சிகள் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக பல சினிமா பிரபலங்கள் தங்களது பேட்டிகளில் கூறியுள்ளனர். அந்த வகையில் பி.வாசு இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜயகாந்த், நடிகை மீனா,கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சேதுபதி ஐபிஎஸ். 

Continues below advertisement

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மணிகூண்டின் மீது விஜயகாந்த் ஏறுவது காட்சி வைக்கப்பட்டிருக்கும்.  இதனை திரையில் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும். இந்நிலையில் இந்த காட்சியில் உயரமான மணிகூண்டின் மீது கயிறு இல்லாமல், டூப் போடாமல் விஜயகாந்த் அசால்ட்டாக செய்ததாகவும், அவரது டெடிகேஷன் குறித்து தனது தாத்தா தெரிவித்துள்ளதாகவும் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளின் போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண