ஏற்கனவே விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மாற்றமாக, தன்னை கணவர் விஜய்யின் வீட்டிற்குள் அனுமதிக்க உத்தரவிடக் கோரி மீண்டும் ஒரு இடைக்கால மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
லண்டனில் இருந்து இன்று திரும்பிய சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இதில் " விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதால் தற்போது தான் சென்னையில் வசிக்க வீடில்லாம் இருக்கிறேன். நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரி பாதி உரிமை உள்ளது. எனவே விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக கேட்டால் என்னை வழக்கரிஞ்சர் மூலமாக விஜய் என்னை மிரட்டுகிறார்" என சங்கீதா புதிய மனுவில் கூறியுள்ளார்.
மனுதாரரான சங்கீதா லண்டனில் பையோ மெடிக்கல் சைன்ஸில் இளங்கலை பட்டம் பெற்றவர். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் முதலில் சாலிகிராமத்திலும் பின் அடையார் கஸ்துர்பா நகரிலும் பின் நிரந்தரமாக நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு குடியேறினார். இந்த திருமணத்தை நாகரிகமாகவும் மரியாதையான முறையில் முடித்துக்கொள்ள சங்கீதா தரப்பில் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. மேலும் சங்கீதா நீதிமன்றத்தை அனுகினால் அவர் நீலங்கரை வீட்டில் வசிக்கக் கூடாது என விஜய் தனது வழக்கரிஞர் மூலம் தெரிவித்துள்ளதாக" இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்வரை அல்லது விஜய் தனக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்து தரும் வரையில் நீலாங்கரை வீட்டில் அவரை தங்க அனுமதிக்குமாறு சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தம்பதியினரிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், சட்டப் பூர்வமாக விவாகரத்து கோரிய நிலையிலும், இல்லத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ள இந்த நடவடிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த ஆண்டு சங்கீதா தாக்கல் செய்திருந்த மனு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வருவதாக விவாகரது மனுவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது இந்த விஷயத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது
