சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார். இப்படியான நிலையில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்று மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் விவாகரத்து கேட்டு தான் நீதிமன்றத்தை அனுகியதால் நீலாங்கரையில் உள்ள தனது புகுந்த வீட்டிற்குள் விஜய் தன்னை அனுமதிக்க மறுத்துள்ளதாகவும் பிரிட்டிஷ் குடிமகளான தனக்கு சென்னை வசிப்பதற்கு வேறு வீடில்லாமல் இருந்து வருவதாக சங்கீதா தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரும் வரை தன்னை நீலாங்கரை வீட்டில் இருக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார். 

சங்கீதாவுக்கு பெண்கள் இடையில் ஆதரவு 

கருர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோதும் கூட விஜய்க்கு பெண்கள் இடையில் இருந்த ஆதரவு குறையவில்லை. ஆனால் தற்போது சங்கீதாவுடனான விவாகரத்து விஷயம் பெண்களிடையே விஜயின் செல்வாக்கை பெரியளவில் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக இன்னொரு நடிகையுடன் விஜய்க்கு திருமணம் கடந்த உறவு இருப்பதாக சங்கீதா தனது மனுவுல் குற்றம்சாட்டிய ஒரு சில நாட்களில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தவெக ஆதரவாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே , தனது மீதான மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் விஜய் த்ரிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இது அவரை இத்தனை காலம் ஆதரித்து வந்த ரசிகர்களின் நம்பிக்கைக்கு அவமரியாதை செய்வதாக அமைந்துள்ளது. தற்போது 28 வருடம் குடும்பம் நடத்திய மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காத அளவிற்கு விஜய் மோசமானவரா என பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  

Continues below advertisement

இந்த நிகழ்வு மகளிர் தினத்தின் போது நடந்துள்ளதே மிகப்பெரிய முரணாக அமைந்துள்ளது. ஊரில் உள்ள பெண்களை ஒன்றுதிரட்டி மகளிர் தினம் கொண்டாடும் விஜய் தனது சொந்த மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் ரோட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார் என தவெக கட்சிக்கு ஆதரவளித்த பெண்களே கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மகளின் தின விழாவில் விஜய் தன் தரப்பில் என்ன பேசவிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள.