தனியார் தொலைக்காட்சியில் விஜே வாக இருக்கும் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் அவரின் திருமணத்தில் நீண்ட நாள் நண்பராக இருக்கும் மாகாபா கலந்து கொள்ளாதது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. இவருக்கும் பிரவீன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். சட்டப்படி இருவரும் விவாகரத்தும் பெற்றுள்ளனர். ஆனால் இதுகுறித்த செய்தி வெளிவராமலே இருந்தது.
பிரியங்க பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை. இதையடுத்து பிரியங்காவின் தாய் அளித்த பேட்டி ஒன்றில் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதன்மூலமே பிரியங்கா கணவரை பிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் டிஜே வாக இருக்கும் வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை பிரியங்கா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
இந்த திருமணத்தில் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் பிரியங்காவின் நீண்ட நாள் நண்பரான மாகாபா கலந்து கொள்ளவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இரண்டாவது திருமணம் செய்தது மாகாபாவிற்கு பிடிக்கவில்லையா எனவும் கேள்வி எழுந்தது.
இதுகுறித்து மாகாபா விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இதற்காக பிரியங்கா அப்போதே போன் செய்து திட்டிவிட்டார்.
பிரியங்காவிற்கு எங்கிருந்தாலும் எனது ஆசிர்வாதம் இருக்கும். பிரியங்கா கணவரும் எனக்கு பரிச்சையமானவர்தான். அவரும் மிகவும் அன்பானவர். எனக்கு சூழ்நிலை சரியில்லாததால் என்னால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.