புதிய புதிய ஷோக்களை களமிறக்குவதில் விஜய் டிவி முன்னணி சேனலாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியாக, ‘தாயில்லாமல் நானில்லை’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.வாக இருந்து வி.ஜேவாக மாறிய அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் தொகுத்து வழங்குகின்றனர். உடல்நல குறைவு காரணமாக, சிறிது இடைவேளை விட்டிருந்த விஜே அர்ச்சனா, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
ஏற்கனவே தாயும், மகளும் தங்களது யூடியூப் சேனல் வாயிலாக ஏராளாமான ரசிகர்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில், தற்போது விஜய் டிவியின் தாயில்லாமல் நானில்லை நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் ஒன்றாக களமிறங்க உள்ளனர்.
வரும் ஞாயிற்று கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரோமோவில் விஜய் டிவி பிரபலங்களும் அவர்களது அம்மாக்களும் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான செந்திலும், அவரது அம்மாவும் பங்கேற்றனர். அப்போது, செந்தில் “ பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா உன்” என்று பாட, ஒட்டு மொத்த குழுவும் கண்ணீரால் வழிந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்