விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்றது ’குக் வித் கோமாளி என்பதும் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் தற்போது திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று பிஸியாக உள்ளனர்.
மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்தது.
புகழும் தற்போது சினிமாவில் தீவிரமாக உள்ளார். படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவி புகழ் திடீரென ஜீ டிவியில் வந்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். விஜய் டிவியின் போட்டி டிவியாக பார்க்கப்படுவது ஜீ. இப்படி இருக்கையில் புகழ் எப்படி அங்கே என பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்தார். இது என்ன புதுக்கதை டிவி மாறிவிட்டாரா என பலரும் குழப்பத்தில் ஆழ, படத்திற்கான விளம்பரமாகவே அவர் ஜீ டிவிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நடிகர் அஷ்வினுடன், புகழ் இணைந்து நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்குத்தான் புகழ், அஸ்வின் இருவரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.