ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சில வாரங்களாக ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்கள் விஜய் டிவியின் செல்லமான தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே.
விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி :
புதுமைகளை வாரி வாரி வழங்குவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சு கொள்ள ஆளே இல்லை. அந்த வகையில் நடிகை சமந்தாவின் கிளுகிளுப்பான பாடலின் முதல் வரியை இந்த நிகழ்ச்சியின் பெயராக வைத்ததிலேயே அவர்கள் பாதி சக்சஸ் அடைந்து விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளை குதூகலப்படுத்தும் பல ஷோக்களை ஒளிபரப்பும் விஜய் டிவியின் மற்றுமொரு கலகலப்பான நிகழ்ச்சி இது.
இந்த வாரம் கலந்து கொள்ளும் பிபி ஜோடிகள் :
இந்த வாரத்திற்கான "ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிபி ஜோடிகள் சீசன் 2 போட்டியாளர்கள் தான் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியினை அலங்கரிக்க வருகிறார்கள். பிபி ஜோடிகள் சீசன் 2 என்றால் அதில் அமீர் - பாவனி இல்லாமலா? அவர்களை வைத்து தான் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பச்சைக்கொடி காட்டிய பாவனி :
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அமீர் பல விதமாக, பல டைப்பாக பாவனியை இம்ப்ரெஸ் செய்ய என்ன என்னவோ செய்தார். எதற்கும் மசியாத பாவனி பல காரணங்களை சொல்லி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றே கூறி அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டாமல் தள்ளி கொண்டே வந்தார். ஆனால் சமீபத்தில் தான் பாவனி தன் காதலை அமீரிடம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா செய்த தரமான காரியம் :
இந்த மேட்டரை பிரியங்கா எப்படி விடுவார். நீ பர்சனலா சொன்னது எல்லாமே வேணாம். அமீர் அவனோட காதலை எப்படி எல்லாம் எக்ஸ்பிரஸ் பண்ணான். நீயும் அதே போல எல்லார் முன்னாடியும் ஐ லவ் யு சொல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். "தங்கமே உன்னத்தான்... " பாடல் ஒலிக்க அமீர் நளினமாக ஆடி பாவனியை ப்ரொபோஸ் செய்கிறார். அதை அழகா ஏற்கிறார் பாவனி. இந்த அருமையான தருணம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் " ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கிறது. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க... இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.