பிக்பாஸ் 3 புகழ் நடிகை வனிதா விஜயகுமார், காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகல்வகளையும் வெளியிட்டுள்ளார்.   

Continues below advertisement


சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் மிகவும் திறமைசாலியாக, தைரியசாலியாக வனிதா விஜயகுமார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், யூடுயுப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்த நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி எண்ணற்ற ரசிகர்களைத் தன் பக்கம் கொண்டுள்ளார்.  விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார்.  நல்லது, கெட்டது போன்ற சமூகத்தின் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் பெரிதும் மதிப்புக் கொடுக்காதவராகவும் அறியப்படுகிறார்.  


1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் சினிமாத் துறைக்குள் நுழைந்துள்ளார். பவர் ஸ்டாருடன் இவர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தொடர்பான செய்தி முன்னதாக ஊடகங்களில் வெளியானது.                       


  






  


இந்த பாடல்,  #itemsong #itemnumber குத்துப்பாடலாக வரும் என்று குறிப்படப்பட்டுள்ளது. மேலும், வனிதா தனது போஸ்டில் #balagana என்று டேக் செய்திருப்பதால், பிரபல பின்னணி பாடகரான கானா பாலா (எ) பால முருகன் பாடியிருக்க கூடும் என்றும் அறியப்படுகிறது.     


 


Train Update | சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்