சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக மிகவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு தொடராக இருந்து வருகிறது. மௌன ராகம் முதல் சீசனின் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது இரண்டாம் பாகம்.
மௌன ராகம் சீரியலின் முதல் சீசன் 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. அதற்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து 2021ம் ஆண்டு முதல் மௌன ராகம் சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முடிவுக்கு வரும் ரவீனா தாஹா, ராஜிவ் பரமேஸ்வர், சிப்பி ரஞ்சித், ஷில்பா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த் பாபு, சீமா ஜி நாயர், அஞ்சலி தேவி, கைலாஷ் நாத், அனுஸ்ரீ செம்பகச்சேரி, திவ்யா பினு மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் நட்சத்திரங்களுக்கு சோசியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 560 எபிசோட்களையும் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
மலையாளத்தில் ஒளிபரப்பான 'வானம்பாடி' தொடரின் ரீமேக்காகும். குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர். மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவடைய உள்ளது என கூறப்படுகிறது. அந்த வகையில் இறுதி நாள் படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சி வரும் மார்ச் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி ரசிகர்களுக்கு மௌன ராகம் சீரியல் முடிவடைவது ரசிகர்களுக்கு சோகம்தான்.
அதே சமயத்தில் புதிதாக விஜய் டிவியில் பொன்னி மற்றும் விக்ரம் வேதா என இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.