ஒரு எபிசோட்க்கு இத்தனை ஆயிரமா...குக்கு வித் கோமாளிக்கு பிரியங்கா வாங்கிய சம்பளம்

Priyanka Deshpande : விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே பிரபல டிஜே வசியை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

Continues below advertisement

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக திகழ்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.  ப்ரியங்காவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரது முதல் கணவர் ப்ரவினுக்கும் இவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், சில தனிப்பட்ட காரணங்களால் அவரை கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

Continues below advertisement

யார் இந்த டிஜே வசி

பிரியங்கா தற்போது திருமணம் செய்திருக்கும் வசி என்பவர் ஒரு பிரபல டிஜே. இந்தியாவில் இசைத்துறையில் பரவலாக அறியப்படுபவர் இவர் சொந்தமாக ஒரு Event Management  நிறுவனமும் நடத்தி வருகிறார். பல தனியார் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளை இந்த நிறுவனம் ஒருங்கிணைத்து வருகிறது. 32 வயதான பிரியங்காவை திருமணம் செய்திருக்கும் வசிக்கு தற்போது 42 வயதாகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்டு டேட் செய்யத் தொடங்கினார்கள். பிரியங்கா மற்றும் வசியின் திருமணத்திற்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குக்கு வித் கோமாளிக்கு பிரியங்கா வாங்கிய சம்பளம்

ஒரு பக்கம் டிஜே வசி பிரபலமாக அறியப்பட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் பிரியங்கா. அதிகம் சம்பளம் வாங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் பிரியங்காவின் பெயரும் ஒன்று. அந்த வகையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரியங்கா வாங்கிய சம்பளம் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஒரு எபிசோட்க்கு பிரியங்கா 18 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் மட்டுமே கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola