விஜய் டிவியில் காமெடி ஷோவில் அறிமுகமான புகழ், இப்போது விஜய் டிவி புகழாக மாறிவிட்டார். இத்தனைக்கும் பலர் பங்கெடுக்கும் நிகழ்ச்சியில் பணியாற்றி, தனித்தன்மையோடு தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது சின்னத்திரையை கடந்து வெள்ளித்திரையிலும் தனக்கென தனி முத்திரையை பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
அடுத்தடுத்து குவிந்து வரும் படங்களால்... பயங்கர பிஸி. சின்னத்திரையில் இருக்கும் போதே... ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதில் வரும் பெண்களை கலாய்ப்பது, ஒருதலையாய் காதலிப்பது என ரகளை செய்யும் புகழுக்கு, பவித்ரா தான் எப்போது ப்ரியமானவர். அவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டி, விஜய் டிவி பார்வையாளர்களுக்கு பரிட்சையமானது.
சின்னத்திரை சமந்தா என பவித்ராவை கொண்டாடுபவர்கள், புகழுடன் அவர் அடிக்கும் லூட்டிகளை ரசித்து விரும்புவர். புகழ் தற்போது வெள்ளித்திரை வந்ததால், சின்னத்திரை ரசிகர்கள் அவரை மிஸ் செய்கின்றனர்.
ஆனாலும்... அவர் இன்னும் உச்சம் செல்வார் என வாழ்த்துபவர்களும் உண்டு. இந்த நிலையில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகழ் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் கீ போர்டு ஒன்றை அசால்டாக வசிப்பார்(வாசிப்பா... என்பதை பார்த்து தான் சொல்ல வேண்டும்).
அட... புகழ் இப்போ இசையமைப்பாளர் ஆகிட்டாரா... என அனைவரும் அதிர்ச்சியில் திகைத்து போன அந்த நொடியில், திடீரென உள்ளே நுழைந்த இருவர், புகழை ஏற இறங்க பார்க்கின்றனர்.
அவ்வளவு தான், கீ போர்டை துடைப்பது போல வழக்கம் போல அவருக்கே உரிய வகையில் குறும்பு பண்ணி அங்கிருந்து நகர்ந்தார் புகழ்.
சரி இது ஒரு விசயம் என்றால்... அதில் போட்ட கமெண்ட் தான் ஹைலைட். அவரது பதிவுக்கு சின்னத்திரை சமந்தா பவித்ரா வந்து கமெண்ட் செய்திருந்தார். ‛‛அடுத்து மியூசிக்ல இறங்கிட்டீங்களா செல் லம்...’ என பவித்ரா கமெண்ட் போட... அவ்வளவு தான், அந்த பக்கம் பங்கமாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறது. ‛ஏன் அவர் மியூசிக் டைரக்டர் ஆகக் கூடாதா...’ என உள்ளர்த்தம் புரியாமல் வசைபாடுபவர்கள் ஒருபுறம், நடக்கட்டும் நடக்கட்டும் என கிண்டல் செய்பவர்கள் மறுபுறம் என புகழின் புகழ் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை... இந்த வீடியோ கேலி கிண்டலாக இருக்கலாம்; ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கலாம்... நடந்திருக்கிறது. நாளைக்கு புகழ் புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் மாறலாம்... அவர் இசையமைத்த பாடலை... இதே பக்கத்தில் நாமும் கேட்கலாம்! என்ன செய்ய... நேரம் நல்லா இருந்தால் எல்லாம் நடக்கும்!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்