விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்துக் கொண்டு உள்ளார்கள்.


 குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், அதே அளவு பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு வின்னரை அறிவித்தார். ஆனால், இந்த சீசன் தொடக்கம் முதலே நடிகர் சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே. பாலாஜி என பல பிரபலங்களும் இறுதி போட்டிக்கு முன்னதாகவே கலந்து கொண்டனர். இதன் காரணமாக வாரம் வாரம் குக் வித் கோமாளி கலைக்கட்டி வருகிறது. 


இந்தநிலையில், குக் வித் கோமாளி சீசன் 3 யில் கோமாளியாக இருந்து வரும் குரேஷி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் அனுப்பிய பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், “எனது பதிவிற்கு அண்ணா நீங்கள்ரிப்ளே பண்ணுவீங்களானு எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு மெசஜ் அனுப்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 




தீவிரமாக கடந்த சில நாட்களாக நான் மன அழுத்தத்தில் இருந்தேன் ஆனால் குக் வித் கோமாளி சீசன் பார்த்த பிறகு முக்கியமாக நீங்கள் ஸ்ருதிகா போல் நடித்த பகுதி என் மனதை அமைதிப்படுத்தியது. நான் அதை மீண்டும் மீண்டும் பார்த்தேன் உண்மையில் 100 தடவைகளுக்கு மேல் பார்த்தேன் இன்னும் எனக்கு சலிப்பே இல்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்களின் பெரிய ரசிகன் அண்ணா. விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் அண்ணா என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண