விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக திகழ்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். 

ப்ரியங்கா தேஷ்பாண்டேவிற்கு திருமணம்:

இந்த நிலையில், இவருக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் வசி என்பவரை தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தனது திருமண புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துள்ள நபர் யார்? என்று தெரியவந்துள்ளது. 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரியங்காவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரது முதல் கணவர் ப்ரவினுக்கும் இவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், சில தனிப்பட்ட காரணங்களால் அவரை கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

பிரபலங்கள் வாழ்த்து:

இந்த நிலையில், தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி மிகவும் குறிப்பிட்ட நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்பு அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களுக்கு பிரபலங்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.