தி கோட் (The Goat Third Single)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடல் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடல் சின்ன சின்ன கண்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பாடல் மீது பெரும் எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. இப்பாடலில் நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த தகவல்களை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
தற்போது தி கோட் படத்தின் மூன்றாவது பாடலின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலில் விஜயுடன் நடனமாடும் நடிகையில் தோற்றம் ரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது