தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என உலகம் முழுவதும் கிட்டதட்ட 5000 திரையரங்கங்களில் வெளியாகிய தி கோட் முதல் நாளில் 126 கோடி வசூலித்தது. திரையரங்கில் வெற்றிகரமாக 25 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை 450 கோடி வசூகித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. விஜயின் முந்தைய படமான லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேலாக வசூலித்த நிலையில் தி கோட் 500 கோடியை எட்டாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


சிவகார்த்திகேயனிடம் துப்பாகியை கொடுத்த விஜய்


தி கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விஜய் முற்றிலுமாக விலக இருக்கிறார். விஜய்க்கு பின் தமிழ் சினிமாவில் அவர் இடத்தை யார் நிரப்புவார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. தற்போதையை நிலைப்படி சிவகார்த்திகேயன் ஒருவரே விஜய் அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக இருக்கிறார். மேலும் தி கோட் படத்திலும் விஜய் சிவகார்த்திகேயனிடம் பொறுப்பை ஒப்படைத்து போகும் காட்சியின் மூலம் தனக்கு பின் சிவகார்த்திகேயன் தான் என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். இந்த காட்சி திரையரங்கில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


தி கோட் படத்தில் நீக்கப்பட்ட நடிகர் சதீஷ் காட்சிகள்


சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்துவிட்ட பின் தான் நடித்த காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும் ஆனால் படத்தில் அந்த காட்சி இடம்பெறவில்லை என்று நடிகர் சதீஷ் தற்போது தெரிவித்துள்ளார். "விஜய் சார் துப்பாக்கிய  கொடுத்துவிட்டு சென்றபின் நான் அங்க வருவேன். சிவாகிட்ட அப்போ நான் உங்க இடத்த பாத்துகிட்டா என்று சிவாவிடம் கேட்பேன். ஆனால் அந்த காட்சியை எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள்" என சதீஷ் தெரிவித்துள்ளார். காமெடியனாக அறிமுகமான சதீஷ் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சட்டம் என் கையில் சதீஷ் நடிப்பில் வெளியானது. நீக்கப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க : Sattam En Kaiyil Review : உங்ககிட்ட இருந்து இத நாங்க எதிர்பார்க்கல சதீஷ்... சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்