தி கோட்


வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று தி கோட் படத்தின் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக சென்னை ரோகிணி திரையரங்கில் முன்பதிவுகள் தொடங்கிவருகின்றன. படம் வெளியாக இன்னும் ஒரு வாரத்திற்கு குறைவான காலமே இருக்கும் நிலையில் இன்னும் ஆடியோ லாஞ்ச் குறித்த எந்த தகவலும் வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தி கோட் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. 


தி கோட் படம் குறித்து வெங்கட் பிரபு


தி கோட் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியபோது “ ரஜினினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஒரு படத்தை முழுவதுமாக ரசிகர்கள் கொண்டாடவில்லை. கதை , திரைக்கதை , ஆக்‌ஷன் , பாடல்கள் என ஒரு படத்தின் மொத்த அம்சங்களையும் கொண்டாடும் விதமாக தி கோட் படத்தை எடுத்திருக்கிறேன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது உங்களால் நிச்சயமாக யூகிக்க முடியாத வகையில் இந்த படத்தின் திரைக்கதையை நான் அமைத்திருக்கிறேன். “ என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 


தி கோட் நான்காவது பாடல்


தி கோட் படத்தின் நான்காவது பாடல் இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் இரு ஸ்பெஷலான பாடலாக இருக்கும் என்று குறப்படுகிறது. தற்போது வரை இப்பாடலில் நடிகை த்ரிஷா கெஸ்ட் ரோலில் வந்துபோவதாக கூறப்பட்டாலும்  அஜித் ரசிகர்கள் மத்தியில் புதிதான ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது இதே ஆகஸ்ட் 31 தேதி 2011 ஆம் ஆண்டு தான் வெங்கட் பிரபு இயக்கிய அஜித்தின் மங்காத்தா படமும் வெளியானது. இதனால் வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் ஏதாவது சம்பவம் செய்திருப்பாரா என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் இருந்து வருகிறது.






இதற்கேற்றார்போல் நடிகர் அஜித்துடன் தனது தந்தை கங்கை அமரன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மங்காத்தா படம் வெளியான நாளும்  , இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளும் தி கோட் படத்தின் பாடல் ஆகிய முன்றும் ஒரே நாளில் வெளியாகின்றன. இதைவிட மகிழ்ச்சியான நாள் தனக்கு இல்லை என வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.