விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வை இங்கு காணலாம். முத்து வீட்டிற்கு கிரிஷா கூட்டி சென்றால் விஜயா திட்டுவார் என்பதால், கிரிஷ் மீனா வீட்டில் பத்திரமாக இருக்கிறான். அங்கு மீனாவின் அம்மாவும், சத்யாவும் பாசமாக பார்த்து கொள்கிறார்கள். கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டிவிடும்போது எதிர்பாராதவிதமாக அவனது அம்மா குறித்து கேட்டதும் தடுமாறுகிறான். பின்னர், எதற்கு என்று கேட்டதும் உனக்கு உங்க அம்மா ஸ்நாக்ஸ் வாங்கி வருவாங்க என்று சத்யா கூறுகிறார்.
மீனா வீட்டில் இருக்கும் கிரிஷ்
ஆனால், கிரிஷ் எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடுகிறான். உண்மையை சொன்னால் அம்மா ( ரோகிணி) மாட்டிக்குவாங்க என்பதால் வாயை திறக்காமல் இருக்கிறான். கிரிஷ் மீனா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கம் வராமல் அங்கும் இங்குமாய் அலைமோதுகிறாள். இதை பார்த்த மனோஜ் என்ன ரோகிணி தூங்கலையா என்று கேட்க, தூக்கம் வரலை என்ன ஆச்சுனு தெரியலை என பதிலளிக்கிறாள். ஆனால், மனோஜ் கொஞ்சம் நக்கலாக பேச ரோகிணிக்கு எரிச்சல் வருகிறது. மனோஜ் பதில் பேசாமல் மீண்டும் தூங்குகிறார்.
அடம்பிடிக்கும் ரோகிணி
அடுத்த நாள் முத்து மற்றும் மீனா இருவரும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி மேனஜரை பார்த்ததும் கிரிஷ் பயப்படுவதால், ஸ்கூல் முடிந்ததும் நாளைக்கு வந்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக முத்து கூறுகிறார். முத்துவும் மீனாவும் ஸ்கூலை விட்டு கிளம்பிவிட ரோகிணி மகேஸ்வரியின் உதவியோடு கிரிஷை சந்தித்து பேசுகிறாள். அப்போது க்ரிஷை அம்மா சொல்வதை கேளு, இந்த ஸ்கூல் நல்லா இருக்கு. இதை விட்டு எங்கே போற, நீ மகேஸ்வரி வீட்டில் தான் இருக்கணும் என்று ரோகணி அதட்ட தொடங்கியதும், . நீ வந்து கூட்டிட்டு போ இல்லனா மீனா ஆண்டி வீட்டில் தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறான். கிரிஷை அதற்குள் மேல் திட்டமுடியாமல் ரோகிணி திணறி போய் நிற்கிறார்.
25 லட்சம் கேட்கும் நடிகை
ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு நடிகை ஒருவரை பார்த்து பேசுகிறார். அவர் முதலில் பாசமாக பேசினாலும் திறப்பு விழாவிற்கு 25 லட்சம் கேட்க ஸ்ருதி அதிர்ச்சியடைகிறார். என்னுடைய பட்ஜெட்டே அவ்வளவுதான். வேண்டாம் எனக் கூறி கிளம்பிவிடுகிறார். அடுத்ததாக மீனாவின் வீட்டில் சத்யாவுடன் மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் பள்ளியில் பேசிய விஷயத்தை சொல்ல சத்யாவும் அவன் இங்கே இருக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் சீதா வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் மனசு சரியில்லை. அதனால் ஒரு கவுன்சிலிங் கொடுக்கணும் என்கிறார். வீட்டில் இருக்கும் போது தனது கடை திறப்பு விழாவிற்கு நடிகையை அழைத்தது குறித்து ஸ்ருதி கூற, மனோஜ் நான் வரட்டா என்றதும், முத்து அவரை கலாய்க்க என கலகலப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ரோகிணிக்கு இருக்கும் தலைவலி க்ரிஷ் தான். அதில் இருந்து எப்படி தப்பிப்பார் என்பதே பலரும் எதிர்பார்ப்பாக உள்ளது.