பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு பெரிய ஹீரோக்களின் படம் நீண்ட ஆண்டுகள் கழித்து நேரடியாக மோதவுள்ளது; இந்த இரு படங்களின் குழுவினரும் அவர்களுக்கான ப்ரோமோஷன் வேலைகளை மும்மரமாக செய்து வருகின்றனர்.
145 நிமிட நீளத்தை கொண்ட அஜித் நடித்த துணிவு படம், U/A சான்றிதழை பெற்றது; அத்துடன் துணிவு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் வெளியானது. பிறகு அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ட்ரெய்லரும் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
ஒருபுறம் துணிவு படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு தங்களுக்கான ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். மறுபுறம், வாரிசு படக்குழுவினர் பாடல்களை வைத்தும் பிரமாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் நடத்தியும் அசால்ட் செய்தனர். பிறகு வாரிசு குழுவினரிடம் இருந்து பெரிய அப்டேட் எதுவும் வரவில்லை.
தற்போது, வாரிசு படக்குழு தங்களின் படத்தை சென்சார் தணிக்கைகுழுவிற்கு அனுப்பியுள்ளது. 2 மணி நேரம் மற்றும் 49 நிமிட நீளத்தை கொண்ட ‘வாரிசு’ படத்திற்கு U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால், இன்று வரை துணிவு மற்றும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது.
தில் ராஜூவின் சவால்
முன்னதாக, வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, பேட்டி ஒன்றில் “விஜய்தான் நம்பர் 1 ஸ்டார்” என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். சர்ச்சை கிளம்பிய நிலையில், அதற்கான தெளிவான விளக்கத்தை தில் ராஜூ கொடுத்தார்.
சமீபமாக நடந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், “விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருப்பினும், என் ஹீரோ விஜய்தான் பெரிய ஸ்டார். அதனால்தான் வாரிசுக்கு நிறைய திரையரங்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்டேன். ஒருவர் பெரிய ஸ்டார் என்பதை எப்படி நிர்ணயம் செய்யமுடியும் ..? ஒரு திரையுலக நட்சத்திரத்தின் மதிப்பு, அவருக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் மூலமே நிர்ணயம் செய்யப்படும்.
விஜய் நடித்து வெளியான கடைசி 6 படங்களும், தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாயிற்கு மேல் வசூல் செய்துள்ளது; ஒரு படம் ஹிட்டோ ஃப்ளாப்போ.. அது வேறு விஷயம். விஜயின் படங்கள் தொடர்ந்து சீரான வசூலை செய்து வருகிறது. அதனால், தற்போது மற்றவர்களை விட அவர்தான் பெரிய ஸ்டார்.” என தனது விளக்கத்தை தில் ராஜூ கொடுத்தார்