தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் திரையரங்குகளில் அதிரி புதிரி ஹிட் அடித்து பாக்ஸ் ஆபீசில் கலெக்ஷனை அள்ளி வருகிறது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் வெளியான நான்கே நாட்களில் மட்டும் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் நடிப்பில் கலக்கி வரும் அதே வேளையில் ரிட்டைர்மென்ட் பெற்று முழு கவனத்தையும் அரசியலில் செலுத்த உள்ளார் என தெரிவித்து இருந்தார். விஜய் அரசியலில் களம் காண இறங்கும் அதே வேலையில் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரின் கால்வழியே இயக்குநராக களம் இறங்க உள்ளார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

Continues below advertisement

 

Continues below advertisement

 

பல பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் முறையாக ஜேசன் சஞ்சய் இயக்குநராக தன்னுடைய பயணத்தை தொடங்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பல மாதங்கள் முன்னரே வெளியானது. ஆனால் அது குறித்த வேறு எந்த தகவலும் அதற்கு பிறகு வெளியாகவில்லை. இது எந்த ஜானர் படமாக இருக்கும்? யார் ஹீரோ இப்படி பல கேள்விகள் எழுந்த நிலையில் வாரிசு நடிகர்கள் தான் சாய்ஸாக இருப்பார்கள் என பல வதந்திகள் பரவி வந்தன. அந்த வகையில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. 

ஆனால் அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாநகரம், மைக்கேல், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் தான் ஹீரோவாக நடிக்க செலக்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவின், விஜய் சேதுபதி, ஷங்கர் மகன் உள்ளிட்ட பலரின் பெயர் ஜேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க கூடும் என கூறப்பட்ட நிலையில் தற்போது சந்தீப் கிஷன் தான் ஹீரோ என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் பயின்று பல ஷார்ட் பிலிம்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரிடம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.