Pulimada Teaser: புலியும் பட்டாம்பூச்சியும்... ஜோஜூ ஜார்ஜ் நடித்த 'புலிமடா' திரைப்படத்தின் டீசர் வெளியானது!

சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Continues below advertisement

ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் 'புலிமடா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பெரும் வரவேற்பை பெற்றுள்ள புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர்:

ஏ.கே.சாஜன் - ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர், ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். 

படத்தின் டீசரில் குறிப்பிட்டு சொல்லும்படி சில விஷயங்கள் உள்ளன. அதனால் டீஸர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. ஜோஜுவின் நடிப்பு திறமை மீண்டும் ஒருமுறை புலிமடா படத்தில் நிரூபணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, அதாவது தற்போதே பார்வையாளர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. 

ஜோஜு ஜார்ஜுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்:

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணின் சுகந்தம் (ஒரு பெண்ணின் வாசனை) என்பது படத்தின் டேக் லைனாக உள்ளது. பான் இந்தியன் அளவில் வெளிவர இருக்கும் புலிமடா திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் ஆகியோர் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் எக்கச்சக்கமாக பல்வேறு நல்ல திரைப்படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தின் எழுத்தாளர்-இயக்குனர்-எடிட்டர் என மூன்று அவதாரங்களை எடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். 

இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் படங்களை ஐன்ஸ்டீன் மீடியா ஆண்டனி தயாரித்துள்ளார். பிளாக்பஸ்டர் "இரட்டா" திரைப்படத்திற்குப் பிறகு ஜோஜு ஜார்ஜின் அடுத்த வெளியீடான "புலிமடா" திரைப்படம் உள்ளது. இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே மூச்சில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படமாக புலிமடா உருவெடுத்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு:

ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமாட படத்தில் லிஜோமோளும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

ஒரு போலீஸ் கான்ஸ்டபிளான வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) என்ற கதாபாத்திரத்தின் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் அது கொண்டு வரும் மாற்றங்களும் புலிமடாவின் கதைக்களம் என தெரிவிக்கப்படுகிறது. புலிமடா மூலம் அவரது கதாபாத்திரமும் வாழ்க்கையும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் என படக்குழு தெரிவிக்கிறது. தலைப்பிற்கு ஏற்றாற்போல், ஒரு உண்மையான புலியின் குகை வழியாக பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார் இயக்குனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola