Trending
கண்டிப்பாக பார்க்க வேண்டிய விஜய் சேதுபதியின் டாப் 7 மூவிஸ்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
விஜய் சேதுபதி நடிப்பில், வெளியான படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 7 படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய விஜய் சேதுபதி படங்கள்:
மக்கள் செல்வன் என்று கொண்டாடப்படும் விஜய் சேதுபதி நடிப்பில், அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும், குணச்சித்திர ரோல்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜய், ஷாருக் கான் என்று மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 7 படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
விக்ரம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரைன், காயத்ரி, மைனா நந்தினி, ஷிவானி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த த்ரில்லர் படம் விக்ரம். இந்தப் படத்தை இப்போதும் நாம் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

விக்ரம் வேதா:
இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், மணிகண்டன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் விக்ரம் வேதா. த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
மாஸ்டர்:
இயக்குநர் லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, நாசர், கௌரி கிஷன், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் மாஸ்டர். ரூ.135 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.257 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
மேரி கிறிஸ்துமஸ்:
விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாலிவுட் படம் மேரி கிறிஸ்துமஸ். ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.26 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
விடுதலை 2:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த அரசியல் படம் விடுதலை 2. முதல் பாகத்தை விட இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ரூ.70 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.60 கோடி வரையில் வசூல் குவித்தது.
மகாராஜா:
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாறுபட்ட கதை கொண்ட படம் தான் மகாராஜா. முழுக்க முழுக்க எளிய கதையை மையப்படுத்திய இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50ஆவது படம். இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்யபாரதி, முனீஷ்காந்த், மணிகண்டன், பாரதிராஜா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
96:
இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் 96. முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தின் 2ஆம் பாகம் வெளியாக இருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி நிகழ்ச்சியில் தனது பள்ளி பருவ காதலி த்ரிஷாவை மீண்டும் சந்திக்கும் கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட், சோனி லிவ் ஆகிய ஓடிடி பிளாட்பார்ம்களில் படத்தை கண்டு ரசிக்கலாம்.