ஃபீனிக்ஸ் டிரைலர்
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா சேதுபதி ஃபீனிக்ஸ் படத்தின்போது எதிர்கொண்ட சவால்களை பற்றி வெளிப்படையாக பேசினார்.
கதையின் நாயகன் சூர்யா சேதுபதி பேசும்போது, "அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையை நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க பயன்படுத்தி கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக நான் பேசியது சர்ச்சையான பிறகு உள்ளே ரொம்ப வீக்காக இருப்பேன். அதை வெளியே சொன்னால் பலவீனமானவனாக தெரிவேனோ என்கிற தயக்கம் இருந்தது. அந்த மாதிரியான நேரத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் என்னுடன் சேர்ந்து பயணித்தது மிகப்பெரிய உந்துதலாக இருந்தது . நான் பேசியது சர்ச்சையானபோது தயாரிப்பாளர் என்னைப் பற்றி என்ன வேண்டுமானால் நினைத்திருக்கலாம். ஆனால் அடை கடந்து அவர் நான் இருக்கேன் என்று சொன்னார். தேவதர்ஷினி அவர்கள் படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். இயக்குனர் அனல் அரசு அவர்கள் நிறைய சொல்லிக் கொடுத்தார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
சூர்யா சேதுபதி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக ஃபீனிக்ஸ் படத்தின் போஸ்டர் வெளியீட்டின் போது சூர்யா பேசியது சமூக வலைதளத்தில் ட்ரோ மெட்டிரியலாக மாறியது. 'அப்பா வேற நான் பேற ' என சூர்யா சொன்னதை மக்கள் தவறாக புரிந்துகொண்டதாக விளக்கமளித்தார். இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா மிகவும் முதிர்ச்சியாக பேசியுள்ளதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.