‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.



நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. காதல், காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.






விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத்திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாராவும், கதிஜாவாக சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரை காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.


 






முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.