2014ம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'கோலி சோடா'. 'பசங்க' படத்தில் சிறுவர்களாக நடித்த நான்கு பசங்களும் கதாநாயகர்களாக இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது சீதா கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண். அவரின் நடிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


 



ஒல்லியான தோற்றம், சோடாபுட்டி கண்ணாடி என அவரின் தோற்றமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வேறு எந்த படத்திலும் அந்த பெண் அவ்வளவாக நடித்ததில்லை என்றாலும் இன்று வரை பேசப்படும் ஒரு கதாபாத்திரம் சீதா. அப்படத்தில் அவர் ATM என்று தான் அழைக்கப்படுவார். 


கோலி சோடா படத்தின் கதாபாத்திர தேர்வும் அத்தனை அம்சமாக அமைந்ததே அந்த படம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அந்த வகையில் ATM கேரக்டர் தேர்வு பற்றி விஜய் மில்டன் சமீபத்தில் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் பேசி இருந்தார். 


 
ATM கண்டுபிடிச்ச கதையே ஒரு பெரிய கதை தான். அவளுடைய கதாபாத்திரம் தான் அந்த கதையையே தூக்கி நிறுத்த போகும் ஒரு கதாபாத்திரம். அனைவரையும் கன்னெட் பண்ணும் ஒரு கேரக்டர் என்பதால் அந்த பொண்ணை ஃபர்ஸ்ட் பார்த்ததும் பிடிக்கக்கூடாது, பார்க்க பார்க்க தான் பிடிக்கணும் என தனுஷ் பட டயலாக் சொல்லி இந்த டயலாக் ஏத்த மாதிரி ஒரு பொண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என வலை வீசி தேடினோம். 


 



நீங்க போய் ஒவ்வொரு எக்ஸ்போர்ட் வெளியே நில்லுங்கனு அனுப்பி விட்டுருவாங்க. மாலை 5 மணிக்கு எக்ஸ்போர்ட் விடும் போது அங்க வாசலே நில்லுங்க. இந்த டிஸ்க்ரிப்ஷனுக்கு பொருந்துகிற மாதிரி ஏதாவது ஒரு பொண்ணை பார்த்தா நம்மளோட ஆபீஸ் நம்பரை கொடுத்து இன்ட்ரெஸ்ட் இருந்தா போன் பண்ண சொல்லிட்டு வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. பசங்களோட வேலையே டெய்லி சாயங்காலம் எக்ஸ்போர்ட் வாசல்ல நிக்குறது தான்.


அப்படி ஒரு நாள் நான் மார்க்கெட்ல நின்னுகிட்டு இருக்கும் போது அந்த பொண்ணு ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு விறுவிறுன்னு நடந்து போயிட்டு இருந்துது. இந்த பொண்ணு கரெக்டா இருப்பான்னு தோணுச்சு.  என்னோட புல்லெட் எடுத்துக்கிட்டு பின்னாடியே போனேன். எப்படி பேச்சை ஆரம்பிக்குறது  என எனக்கு தெரியல. அப்புறமா ஒரு இடத்துல போய் மடக்கி நிறுத்திட்டேன். அந்த பொண்ணுகிட்ட போய் என்னோட பேர் மில்டன். இது என்னோட நம்பர். எனக்கு போன் பண்றியா? என நான்  சொன்னதும் என்னை அப்படியே பார்த்துட்டு 'தூ' ன்னு துப்பிட்டு போயிட்டா" என்று தெரிவித்தார்.