சென்னை பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள தொகுதிவாரியாக நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தொகுதிக்கு 3 பேர் IT விங் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைமையில் நடைபெறுகிறது.
தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த் : 30 ஆண்டுகளுக்கு முன்பாக ரசிகர் மன்றங்களாக இருந்த நாம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்கள் இயக்கமாக மாறினோம். இனி வரும் காலங்களில் வேறு பரிமாணங்களுடன் பயணிக்க வேண்டிய முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறோம் . அதன் தொடர்ச்சியாக இயக்கத்திற்கு பல்வேறு அணிகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய தகவல் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறோம். மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, தொழில்நுட்ப அணி , வர்த்தக அணி விவசாய அணி , தொழிற்சங்க அணி , தொண்டரணி பல்வேறு அணிகளை பலமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை வேலை நாட்கள். ஆனால் ஒரே ஒரு மெசேஜ் தலைவர் அலுவலகத்தில், வாங்க என கூறியதற்கு, அனைவரும் வந்து உள்ளீர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
மேலும் விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்ப அணியினருக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரம் பூர்வ பக்கங்கள் மூலம் மற்றவர்களின் பதிவுகளை லைக் ஷேர் செய்யக்கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் என்பது கூடவே கூடாது. மொழி, இனம், ஜாதி மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் அரசியல் சமூக தலைவர்கள் திரைத்துறையை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றும் மற்றும் தர்க்கங்கள் நாகரிகத்துடன் ஆதாரங்கள் அடிப்படையில், கருத்தில் ரீதியாகவும் கண்ணியமாகவும் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
முன்னதாக, செய்தியாளர்களிடையே பேசிய புஸ்ஸி ஆனந்த், “விஜய்யின் அறிவுறுத்தலின் படி ஐடி விங் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. 3 லட்சம் பேர் ஐடி விங்கில் இருக்கிறார்கள். நல்ல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தக் கூட்டம் மூலமாக ஆலோசனை வழங்கப்படுகிறது” என்றார்.