விஜய் நடித்திருக்கும் வரும் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், வரும் 5-ந் தேதி லியோ படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது விஜய் , த்ரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஏமாற்றமடைந்த ரசிகரகள்
பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் ஒரு படம். ஆனால் படம் வெளியாகும் நாள் நெருங்கி வரும் சூழலில் பலவிதமான சர்ச்சைகள் படம் குறித்து வெளிவந்தபடி இருப்பது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
ஆடியோ லாஞ்ச்
முன்னதாக சென்னையில் நடைபெற இருந்த லியோ இசை வெளியீடு நிகழ்ச்சியை கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு மிக ஏமாற்றமளிக்கும் செய்தி வந்து சேர்ந்தது. அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்தது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என அத்தனை மொழிகளிலும் வெளியாகும் லியோ திரைப்படம் ரூபாய் 1000 கோடி வசூல் எடுக்கும் என்று ஒருபக்கம் எதிர்பார்ப்புகள் இருக்க மறுபக்கம் படத்திற்கான புரோமோஷன் வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது படம் குறித்த பலவித சர்ச்சைகளுக்கு இடமளித்திருக்கிறது.
லோகேஷ் விஜய் மோதல் உண்மையா?
லியோ படப்பிடிப்பின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் படம் குறித்தான் வேலைகள் தடைபட்டு நிற்பதாக இணையவாசிகள் கிசுகிசுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த குழப்பங்களுக்கு எல்லாம் படக்குழு சார்பில் எந்த விதமான பதிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத காரணத்தினால், ஒரு வதந்திக்கு மேல் இன்னொன்று வந்து கொண்டே இருக்கிறது. இப்படியான நிலையில் இன்று லியோ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
லியோ ட்ரெய்லர்
ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமாக காத்திருந்த லியோ படத்தின் ட்ரெய்லர் தான் இந்த புதிய அப்டேட். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரும் ரசிகரகளை பரபரக்க வைத்துள்ளது. கழுடைப்புலி எதிரில் வெறிகொண்டு நிற்க ஆயுதத்துடன் ரத்தம் சிந்த அதன்மேல் பாய்கிறார் விஜய். லியோ படத்தின் இந்த காட்சி நிச்சயம் ரசிகரகளை பித்து பிடிக்க வைக்கும் காட்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.