பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது ஜனநாயகன். விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் ஆக்‌ஷன் , செண்டிமெண்ட் , அரசியல் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரியளவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில்  இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலும் ரிலீஸூக்கு முன்பே தெரியவந்துள்ளது.

Continues below advertisement

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி

ஜனநாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 121 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement