மத உணர்வுகளை புண்படுத்தியதாக படத்திற்கு எதிராக புகாரளிக்கப் பட்டிருந்ததை காரணம் காட்டி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியது தணிக்கு குழு. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  பதியப்பட்ட வழக்கின் விசாரணை இன்று மதியம் 3:30 மணிக்கு தொடங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .

Continues below advertisement

ஜனநாயகன் தணிக்கை வழக்கில் தீர்ப்பு

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுமார் ரூ 500 கோடியில் இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்திற்கு தணிக்கை சாண்றிதழ் வழங்குவதில் பரபரப்பு ஏற்பட்டது. 

மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன் ? - நீதிபதி கேள்வி

நீதிபதியின் உத்தரவின் படி ஜனநாயகான் படத்திற்கு எதிரான புகார்கள் குறித்த தகால்களை தணிக்கை வாரியம் தாக்கல் செய்தது. ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார்கள் நிலைக்கத்தக்கதல்ல என நீதிபதி சார்பில் கூறப்பட்டது. மேலும் புகார் மனுவில் உள்ள அம்சங்கள் அனைத்தும் ஏற்கனவே தீர்க்கப்பட்டது போல் தெரிகிறது என தணிக்கை வாரியத்தில் அறிவுறுத்தலின் படியில் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்தபின் U/A சான்றிதழ் வழங்க முடிவு செய்தபின் மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன் என நீதிபதி ஆஷா கேள்வி எழுப்பினார்.

Continues below advertisement

மறுதணிக்கை செய்ய தணிக்கை தலைவருக்கு உரிமை உண்டு

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தணிக்கை வாரியம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புகார் மனு தாக்கல் செய்ய அனுமதி கொடுத்தால் நீதிமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும் என்றும் தணிக்கை வாரிய தலைவர் படத்தை மறு ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என மத்திய தணிக்கை வாரியம் சார்பாக கூறப்பட்டது. நிபுனர்கள் ஆலோசனை பெறாமல் ஜனநாயகன் படத்தில் பாதுகாப்பு படையின்  சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வு குழுவின் ஆய்வில் திருப்தி இல்லையென்றால் மறு தணிக்கைக்கு அனுப்ப தணிக்கை வாரியம் தலைவர் முடிவு செய்துள்ளார். இந்தமுறை புதிய உறுப்பினர்கள் படத்தை பார்வையிட உள்ளனர். மறு ஆய்வு குழுவைச் சேர்ந்த  5 பேர் இதுவரை ஜனநாயகன் படத்தை பார்க்கவே இல்லை என்றும் தணிக்கை வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டது

 

தணிக்கை வாரியத்தின் வாதத்தை கேட்ட நீதிபதி 'ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறை அசாதாரணமாக உள்ளது' என்று தெரிவித்தார். 

 

தணிக்கை சான்றிதழில்  தாமதம் ஏன்?

 கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்தன.  டிசம்பர் 18ஆம் தேதி படம் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கு தணிக்கை சாண்றிதழுக்கு  அனுப்பப்பட்டது. டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை குழுவினர் படத்தைப் பார்வையிட்டு, சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனக் கூறி, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான காட்சிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

தணிக்கை குழு தெரிவித்த திருத்தங்களை மேற்கொண்டு, டிசம்பர் 24ஆம் தேதி படம் மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி பதிலளித்த தணிக்கை வாரியம் படத்தை மறுதணிக்கை குழுவிற்கு அனுப்ப முடிவு செய்தது. ராணுவத்தினரை தவறாக சித்தரிக்கும் விதமான காட்சிகளும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறி இப்படத்திற்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில் படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்சார் வாரியம் தெரிவித்தது. இதனால் படதயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்திற்கு விரைவாக தணிக்கை சான்றிதழ் வழங்கும்படியும் இல்லையென்றால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா படத்திற்கு எதிராக புகாரளித்த நபர் குறித்த முழு விபரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை இன்று 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.