Vijay Devarakonda - Rashmika: ராஷ்மிகாவுடன் திருமணமா? காட்டமான பதில் தந்த விஜய் தேவரகொண்டா!

Vijay Devarakonda - Rashmika: வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருவருக்கும் திருமணம் என்றும், இதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Continues below advertisement

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மவுனம் கலைந்துள்ளார்.

Continues below advertisement

பற்றிய கெமிஸ்ட்ரி!

தெலுங்கு சினிமாவில் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்து, தங்கள் ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியால் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற ஜோடி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி.

தெலுங்கு சினிமாவில் இருவரும் வளரத் தொடங்கியது முதல், பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தது வரை இருவரும் இணைந்தே திரைத்துறையில் வளர்ந்து வரும் நிலையில், சினிமா தாண்டி தங்கள் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமான நண்பர்களாக இருவரும் வல வருகின்றனர்.

இருவரும் இணைந்து தங்கள் நண்பர் பட்டாளத்துடன் ஊர் சுற்றுவது, அவரவர் வீடுகளில் பொழுதைக் கழிப்பது என வலம் வர, இருவருக்கும் இடையே காதல் பற்றியதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

பிப்ரவரியில் திருமணம்

இருவரும் ஒரே மாதிரியான உடை அணிவது, ஒரே இடத்தில் இருந்துகொண்டு அடுத்தடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்வது என சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அலைக்கழித்து வரும் நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடிக்கு ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக இவர்களது திருமண செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருவருக்கும் திருமணம் என்றும், இதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் இந்த ஜோடி தங்கள் குடும்பத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை இந்தத் தகவல்களுக்கு இந்த ஜோடி எதிர்வினையாற்றவில்லை.

மேலும் முன்னதாக ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தீபாவளிப் பண்டிகையை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாகக் கொண்டாடியதாகவும், அடுத்த பண்டிகையை திருமண கோலத்தில் ஒன்றாக இருவரும் கொண்டாடுவார்கள் எனவும் இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

2 வருஷத்துக்கு ஒரு கல்யாணம்!

இந்நிலையில் தன் திருமணம் தொடர்பாக பிரபல தனியார் ஊடகத்திடம் நடிகர் விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசியுள்ளார்.

ராஷ்மிகாவுடன் அடுத்த மாதம் திருமணமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,  “எனக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தமும் இல்லை, திருமணமும் இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஊடகங்கள் நினைக்கின்றன. அவர்கள் எனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காகவே வெளியே சுற்றுகிறார்கள்” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா அடுத்ததாக, கீத கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் நடிகை மிருணாள் தாக்கூருடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola