நடிகை விஜய்தேவரகொண்டாவை பார்த்து ரசிகை ஒருவர் அழுத வீடியோவும், அவரை விஜய் தேற்றும் வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
அர்ஜூன் ரெட்டி படத்தில் தனது மொத்த கரிஷ்மாவையும் கொட்டிய விஜய்தேவரகொண்டாவிற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் வந்து சேர்ந்தனர். அதனைத்தொடர்ந்து வந்த ‘கீதா கோவிந்தம்’ ‘ ‘டாக்ஸி வாலா’ ‘ ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக இவரது நடிப்பில் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் ‘லிகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எம் எம் ஏ ஃபைட்டராக விஜய் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குநர் பூரிஜெகன்நாத் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், ரசிகை ஒருவர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம் அந்த வீடியோ, ரசிகை விஜயை பார்ப்பதற்கு முன்னதாக தொடங்குகிறது.. பதற்றம் கலந்த மகிழ்ச்சியோடு செல்லும் அந்த ரசிகை விஜயை பார்த்த மாத்திரத்திலேயே ஸ்டன் ஆகி நின்று விட்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த ரசிகை.. தனது முதுகில் விஜயின் போட்டோவுடன் அவரின் கையெழுத்தையும் டாட்டு போட்டிருந்ததை அவர் காண்பித்தார். தொடர்ந்து விஜயை பார்த்துக்கொண்டிருந்த அந்த ரசிகை கொஞ்சம் நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார். உடனே அவரை விஜய்" data-type="interlinkingkeywords">விஜயை அணைத்துக்கொண்டு தேற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.